Commons:Wiki Loves Monuments 2018 in India/ta

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search
This page is a translated version of a page Commons:Wiki Loves Monuments 2018 in India and the translation is 100% complete. Changes to the translation template, respectively the source language can be submitted through Commons:Wiki Loves Monuments 2018 in India and have to be approved by a translation administrator.

Shortcut: COM:WLMIN2018

நல்வரவு
இந்திய சின்னங்களை விக்கி நேசிக்கிறது 2018
­ இந்தியா
இல்லம் சின்னங்கள் படங்கள் நடுவர் குழு குழு வெற்றிபெற்றவர்கள் புள்ளிவிவரங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
About
இதனைப்பற்றி
ஏன் கலந்துகொள்ள வேண்டும்?

உலகின் மிகப்பெரிய புகைப்பட போட்டியான விக்கி சின்னங்களை நேசிக்கிறது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கம். இதனால் விக்கிமீடிய திட்டங்களில் சின்னங்கள் மற்றும் பாரம்பரிய கட்டிடங்களை ஆவண செய்ய உதவுங்கள்.

கலந்துகொள்வதில் குதூகுலம்! தங்கள் சுற்றுப்புறத்தின் பாரம்பரியத்தை படமெடுப்பதாலும் பகிர்வதாலும், தாங்களும் தங்களின் பாரம்பரியத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்! உங்களது புகைப்பட திறன்களை மேம்படுத்திக்கொள்ள இது ஒரு நல்ல சவால். மேலும் சில நல்ல பரிசுகளையும் வெல்லலாம். தேசிய நடுவர் குழு பத்து புகைப்படங்களை தேர்தெடுத்து சர்வதேச போட்டிக்கு இந்தியா சார்பாக அனுப்பிவைப்பர். இப்படங்கள் சர்வதேச விருதுக்காக போட்டியிடும். இந்த சர்வதேச போட்டியைப் பற்றி மேலும் விவரங்களை அறிந்துகொள்ள https://www.wikilovesmonuments.org/.

மதிப்பிடல் விதிகள்

இந்திய நடுவர் குழு பின்வரும் விதிகளின் படி போட்டியில் வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்வர். இது மற்ற புகைப்பட போட்டிகளை போன்றது அன்று. முக்கியத்துவ வரிசையின் படி, விதிகள் பின்வருமாறு:

  • சின்னங்களைப் பற்றிய ஆராய்ச்சி மற்றும் படங்களை எடுப்பதற்கான முயற்சி - சின்னங்களைப் பற்றிய விவரங்கள், படங்கள் எப்படி எடுக்கப்பட்டன, எப்படி பக்குவபடுத்தப்பட்டது போன்ற விவரங்கள் வரவேற்கபடுகின்றன.
  • படங்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் தரம் (எந்த மொழியானாலும் சரி) [படங்களை பதிவேற்றியவர்கள் கொடுக்கும் விவரங்களை மட்டுமே நடுவர் குழு எடுத்துக்கொள்ளும். மற்றவர் கொடுக்கும் விவரங்கள் எடுத்துக்கொள்ள மாட்டாது]
  • படங்களின் பயன்பாட்டைப் பொருத்த மதிப்பு - எந்த மொழி விக்கிஊடக திட்டங்களாலானும் சரி. தகுந்த தலைப்புகளுடன் படங்களின் பயன்பாடு. அப்படத்தின் மூலம் அக்கட்டுரையின் மதிப்பு உயர்வது.
  • தனித்தன்மையைப் பொருத்து படங்களின் மதிப்பு - இதுவரை எடுக்கப்படாத இடம், சென்றடைவதற்கு கடுமையான இடம், இதுபோன்ற இது மட்டுமே ஒரே படம், முதலியன.
  • தொழில்நுட்ப தரம் (கூர்மை, ஒளியின் பயன்பாடு, பார்வை, பொதிவு, இதுபோல.)
  • சமர்பிக்கப்பட்ட படங்களை நிராகரிப்பதற்கான காரணம் பின்வருவன ஆனால் இதுமட்டுமல்ல:
    • காப்புரிமை மீறப்பட்டதாக சந்தேகம்
    • தேவைப்பட்டால் நடுவர்குழு பங்கேற்பாளர்களை மின்னஞ்சல் அல்லது பேச்சுப்பக்கத்தில் தொடர்பு கொள்ளலாம் - அப்படி பங்கேற்பாளர்களை அடைய முடியாவிட்டால் அல்லது 48 மணிநேரத்தில் பதில் வராவிட்டால் - அச்சமர்ப்பணம் சந்தேகத்துக்கு உட்படலாம், நிராகரிக்கப்படலாம். அதனால் பங்கேற்பாளர்கள் தயவு செய்து தங்களது மின்னஞ்சல், மின்னஞ்சலில் எரிதம், பேச்சு பக்ககளை கவனியுங்கள்
    • lack of full EXIF information – where possible, contributors should include (or link to file versions with EXIF) other versions/from other angles in the other versions details
    • அதிகமான பக்குவப்படுத்தியது, நடைமுறைக்கு புறம்பான வடிப்பான்களை பயன்படுத்துவது
    • படங்கள் சின்னங்களை போதுமான அளவு முழுமையாக காட்டவில்லை
    • படங்களின் மீது நீரோட்டக் குறி அல்லது நன்றி. (படத்தின் ஆசிரியர் பற்றிய செய்தி காப்புரிமை விவரங்களில் வரும். மேலும் EXIFஇல் கூட சேர்த்துக்கொள்ளலாம்)
    • பிரிதிறன் 2 மெகாபிக்ஸலுக்கு குறைவாக

தேர்வு செய்யப்படும் படங்கள், சர்வதேச போட்டியில் கலந்துகொள்ள இப்பக்கதில் உள்ள விதிகளை பின்பற்றி இருக்க வேண்டும். எத்தனை புகைப்படத்தை வேண்டுமானாலும் சமர்பியுங்கள், நடுவர்கள் நன்றாக உள்ளனவா என்பதை தீர்மானிக்கட்டும்.

How to participate
எப்படி கலந்துகொள்வது
முதல் படி: "இந்த வருடம் இந்தப்பட்டியலில் உள்ள சின்னங்களில் கவனம் செலுத்துகிறோம். Check the links and note the monument ID!

இரண்டாம் படி: "சின்னங்களை புகைப்படம் எடுக்கவும். முடிந்த அளவு பல படங்கள், நல்ல படங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். பல கோணங்களில் முயற்சி செய்யுங்கள்.

மூன்றாம் படி: "நீங்கள் புகைப்படம் எடுத்த விவரங்களை எடுத்துக்கொள்ளுங்கள். சின்னங்களின் இடம், மற்ற விவரங்கள் மற்றும் படமெடுத்த தேதிகளை குறித்துக்கொள்ளுங்கள்."

நான்காம் படி: "உங்களுக்கு விக்கிமீடியா காமஸ்லின் கணக்கு உள்ளதா? இல்லையென்றால் ஒரு கணக்கு உருவாக்கவும்-குறைந்த நேரமே எடுக்கும்! உங்கள் மின்னஞ்சல் உறுதி செய்யப்பட்டதா என்று சரிபார்த்துக்கொள்ளவும்."

ஐந்தாம் படி: "உங்கள் படங்களை விக்கிமீடியா காமன்ஸ்சில் 1-30 செப்டம்பர் 2018 தேதிகளில் இங்கு பதிவேற்றவும் "

போட்டி விதிகள்

இப்போட்டியினை எளிமையாக இருக்கும் படி செய்ய முயற்சி செய்கிறோம். இந்தியாவில் பங்கேற்க சில அடிப்படை விதிகள் உள்ளன. அவற்றை விரைவாக காண்போம். எல்லா சமர்மணமும்:

  • சுயமாக எடுக்கப்பட்டு சுயமாக பதிவேற்றப்பட வேண்டும்;
  • செம்டம்பர் மாதம் 2018யில் பதிவேற்றியிருக்க வேண்டும்;
  • சரியான தலைப்பு மற்றும் விபரம் இருக்கவேண்டும்;
  • பதிவேற்றம் செய்யும் பொழுது இப்புகைப்படங்களை CC BY-SA license என்ற காப்புரிமையில் மீண்டும் பயன்படுத்துவதற்குரிய அனுமதியை தாங்கள் அளிக்கவேண்டும்.
  • நீங்கள் புகைப்படம் எடுக்கும் சின்னம் இப்பட்டியலில் உள்ளதா என்று சரிபார்த்துக்கொள்ளவும்.

அதற்கு பிறகு, சில நடைமுறை விதிகள் உள்ளன:

  • தங்களுக்கு விக்கிமீடியா காமன்ஸ்சில் சரிபார்க்கப்பட்ட மின்னஞ்சல் இருக்கவேண்டும்;
  • ஏதாவது காரணத்திற்காக பதிவேற்றப்பட்ட புகைப்படங்கள் நீக்கப்பட்டால், தானாகவே போட்டியிலிருந்தும் அப்புகைப்படம் நீக்கப்படும்;
  • புகைப்படம் எடுக்கும் பொழுதும், பதிவேற்றும் பொழுதும் சட்ட விதிகளை நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.