File:Bujang valley.jpg

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search

Original file(1,571 × 1,046 pixels, file size: 558 KB, MIME type: image/jpeg)

Captions

Captions

Add a one-line explanation of what this file represents

Summary[edit]

Description
English: Candi Bukit Batu Pahat – The Bujang Valley or Lembah Bujang is a sprawling historical complex and is approximately 224 square km large. Situated near Gurun, between Gunung Jerai in the north and Sungai Muda in the south, it is the richest archaeological area in Malaysia.
தமிழ்: தென் கிழக்காசிய நாடுகளில் இந்து சாம்ராஜ்யம் கொடிக்கட்டிப் பறந்தக் காலம் அது.. அரசியல், நீதித்துறை, கலை, கலாச்சாரம், நாகரீகம், மொழி, வணிகம் என அனைத்திலும் இந்து மததின் தாக்கங்கள் இருந்தக் காலம் அது.. சுருங்கச் சொன்னால், தென்கிழக்காசிய மக்களின் நாகரீகம் இந்திய மண் போட்ட விதை. இந்த விதைத் தூவப்படாமல் இருந்திருந்தால், அன்று புகழின் உச்சத்தை அடைந்த சிறீ விஜயம், கடாரம், லங்கா சுகா, பாசாய், மாஜாபாகிட் போன்ற இராஜ்ஜியங்கள் சரித்திரத்தில் பேசப்பட்டிருக்கமாட்டாது..

2-ஆம், 3-ஆம் நூற்றாண்டுகளிலேயே சுவர்ணபூமியில் ஆங்காங்கே சில அரசுகள் ஆட்சி புரிந்துள்ளன. இந்த அரசுகள் இந்து மதங்களைத் தழுவி, அதன் தர்ம சாஸ்திரங்களைப் பின்பற்றி இராஜ்ஜியம் செய்து வந்துள்ளன.

குறிப்பு : சுவர்ணபூமி (தற்போதைய தீபகற்ப மலேசியா) இப்பெயர், தமிழகத்திலிருந்து வணிக நிமித்தம் கடல்வழி அடிக்கடி வந்துப்போகும் தமிழ் வணிகர்களால் இம்மண்ணுக்கு சூட்டப்பட்டது. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் வணிகர்கள் சுவர்ணபூமியில் காலடி பதித்திருக்கின்றனர் என்பதற்கு பல மறுக்க முடியாத தடயங்கள் கிடைத்திருக்கின்றன. அதோடு அன்றையக் காலக்கட்டத்தில் சுவர்ணபூமியில் வாழ்ந்தவர்கள் அனைவரும் (காட்டு வாசிகளைத் தவிர) இந்து மதத்தையும் மகாயான புத்த மதத்தையும் தழுவி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமர் 30 குட்டி அரசுகள் சுவர்ணபூமியில் தோன்றி மறைந்துள்ளதாக தடயங்கள் கூறுகின்றன. இந்த அரசுகளின் ஆட்சிக் காலமும் குறுகிய காலமாக இருந்துள்ளது, அதற்குக் காரணம், வடக்கில் கம்போடியாவில் மிகப் பெரிய இந்து சம்ராஜ்யமான ‘அங்கோர் வாட்’ சாம்ராஜ்யமும், தெற்கில் ஜாவாவில் இந்து அரசான ‘மாஜாபாகிட்’ அரசும் தலையெடுத்ததுதான்.

7-ஆம் நூற்றாண்டுகளிலிருந்து 13-ஆம் நூற்றாண்டுவரை சிறீ விஜயம் எனும் இந்து சாம்ராஜ்யம் தென் கிழக்காசிய பகுதிகளில் பெரும்பகுதிகளை ஆண்டு வந்தது. சிறீ விஜயத்தின் சாம்ராஜ்யம் அக்ஷய முனையிலிருந்து ( வடக்கு சுமத்திரா ) மயூரடிங்கம், மாப்பாலம், மேவிலிம்பங்கம், மாடமாலிங்கம் ( அனைத்தும் சுவர்ணபூமி தீபகற்பத்தில் வடப்பகுதியில் உள்ள ஊர்களின் பெயர்), யவத்வீபம் (ஜாவா தீவு ) வரை பரவியிருந்தது. இருப்பினும் 11-ஆம் நூற்றாண்டில் தமிழர்களின் சோழ சாம்ராஜ்யத்தின் மன்னராக திகழ்ந்த முதலாம் இராஜேந்திர சோழன் அவரின் தலைமையில் மிகப் பெரிய கடற்படை ஒன்று கடராத்தின் அரசு சம்பத்தப்பட்ட உட்பூசல்களைத் தீர்த்து வைப்பதற்கு, கடாரத்தின் மீது படையெடுத்தது. முடிவில் சிறீ விஜயம் பின்வாங்கி அடிபணிந்தது, கடாரம் சோழ நாட்டு இராஜ்ஜியத்தின் கீழ் சேர்ந்தது.

குறிப்பு : கடாரத்தின் மீது படையெடுத்த சோழ சாம்ராஜ்யத்திடம், 3 வகையான மரக்கலங்கள் (மரத்தினாலான கப்பல்கள்) இருந்துள்ளதாக வரலாறு கூறுகின்றன. 1. நெருங்கிய போகுவரத்துத் தொடர்பிற்கு சிறு ரக மரக்கலங்கள். 2. வணிக நிமித்தம் பண்டங்களையும், இதர பொருட்களையும் ஏற்றிச் செல்வதற்கு பெரிய மரக்கலங்கள். 3. கடல் கடந்து போர்ப் புரியக்கூடிய அதி நவீன வசதிகள் கொண்ட மிகப் பெரிய மரக்கலங்கள். மரக்கலங்களுக்கு பொறுப்பெற்றிருப்பவர்களை கலபதி என அழைப்பர்.

தமிழ் நாட்டினருக்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தொடர்பு இருப்பதற்கான தடயங்கள் பல கிடைத்துள்ளன. கெடாவில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று முதலாம் குலோத்துங்கச் சோழனால் விட்டுச் செல்லப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு சமஸ்கிருத மொழியில் சோழ நாட்டிற்கும் கடாரத்திற்கும் உள்ள வணிகத் தொடர்பை விளக்கிக் காட்டியுள்ளது. அதுப்போக புக்கிட் மெரியாம், மூடா ஆற்றின் படுகையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு : கடாரத்திற்கு மேலும் சிலப் பெயர்கள் உள்ளன, அவை கடகா, கிடாரம், ரக்தாம்ருதிகா (சிவப்பு மண்)

சோழ சாம்ராஜ்ஜியத்தில் கடாரம் மிகவும் செழிப்பாகவும், வணிக ரீதியில் அவ்வட்டாரத்திலேயெ மிக முக்கியமான ஒரு நகரமாகவும் திகழ்ந்துள்ளது. தமிழ் வணிகர்களும் தங்கள் வணிகங்களை கடாரம், சிறீ விஜயம், ஃபூனான், சம்பா போன்ற அரசுகளில் செய்திருக்கிறார்கள். இதன் வழியே இந்து மதமும் தென் கிழக்காசிய வட்டாரத்தில் வெகு வேகமாகப் பரவலாயிற்று. இந்து மதம் வணிகர்களாலேயெ பரவியது எனவும், போர் முறைகளினால் அல்ல எனவும் வரலாற்றுக் கூறுகள் பறைச்சாற்றுகின்றன.
Date 24 October 2005 (original upload date)
Source Own work
Author Imhadi at English Wikipedia

Licensing[edit]

Public domain This work has been released into the public domain by its author, Imhadi at English Wikipedia. This applies worldwide.
In some countries this may not be legally possible; if so:
Imhadi grants anyone the right to use this work for any purpose, without any conditions, unless such conditions are required by law.

Original upload log[edit]

The original description page was here. All following user names refer to en.wikipedia.
Date/Time Dimensions User Comment
2005-10-24 21:38 1571×1046× (571196 bytes) Imhadi ImHadi

File history

Click on a date/time to view the file as it appeared at that time.

Date/TimeThumbnailDimensionsUserComment
current15:34, 21 July 2008Thumbnail for version as of 15:34, 21 July 20081,571 × 1,046 (558 KB)Humboldt (talk | contribs){{Information |Description=Bujang Valley, Malaysia |Source=en.wp |Date=24 October 2005 |Author=Imhadi |Permission= |other_versions= }} Category:Malaysia {{ImageUpload|basic}}

File usage on other wikis

Metadata