User:Basithjm

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search

வியூகம் டிவி

[edit]
வியூகம் டிவி Logo

இலங்கையில் வாழும் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களின் அரசியல்இ சமூகஇ சமயஇ ,கலாச்சார விழுமியங்களுடன் கூடிய கனதியான கருத்தியலை உணர்வுபூர்வமாய் உள்வாங்கி அதனூடாக சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் உயரிய நோக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் திகதி ஊடகவியலாளரும், சமூக செயற்பாட்டாளருமான ஜனூஸ் சம்சுதீன் அவர்களால் வியூகம் ஊடக வலையமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.


தூர நோக்கு பணிக் கூற்று மகுட வாசகம்
இலங்கையில் வாழும் பல்லின சமூகத்தின் அரசியல்,சமூக,சமய,கலை,கலாசார விழுமியங்களுடன் கூடிய சமூக ஊடக கட்டமைப்பை நிறுவி, அதனூடாக சமூக நல்லிணக்கத்துடனான மேம்பாட்டினை ஏற்படுத்துதல். நடு நிலையானதும்,நீதியானதும்,வினைத்திறன் மிக்கத்துமான ஊடக ஒழுங்கை சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் பரவலாக்கி, ஊடக குரலற்ற பிரஜைகளுக்கான கருத்து சுதந்திரமிக்க செயற்பாட்டு தளமாக இயங்குதல்... குரலற்ற மக்களின் குரல்
எஸ்.ஜனூஸ் - ஸ்தாபகர்



முகநூல் தொலைக்காட்சி வியூகம் டிவி

[edit]

வியூகம் ஏன் உருவாக்கப்பட்டது என நீங்கள் கேட்பது புரிகிறது? இலங்கையில் கடந்த பல தசாப்தங்களாக விசாலமான, ஊடகப் பார்வையற்ற - ஊடக குரலற்ற மக்களாக முஸ்லிம்கள் நெருக்குவாரங்களை சந்தித்து கொண்டிருந்தாலும் அவற்றை தேசியத்திற்கும் சர்வதேசத்திற்கும் உணர்த்தும் ஊடகம் சார் முயற்சிகளில் நாம் தோல்வி கண்டு வந்திருக்கின்றோம்.

அந்த வகையில் 'நமக்கான ஊடகம் அவசியம்' எனும் கருத்துருவாக்கம் தேசத்தில் மூன்று தசாப்தங்களாக பேசப்பட்டுக்கொண்டிருந்தாலும், வினைத்திறன் மிக்க ஊடக கட்டமைப்பொன்றை முன்னெடுப்பதில் இங்கே பாரிய சிக்கல்கள் இருந்து வருகின்றன.

தேசியத்தில் அந்திய சமூகத்தாரின் சிந்தனைகளை கருக்களாக கொண்டு உருவான ஊடகங்களை ஊட்டி வளர்ப்பதில் முஸ்லிம் தலைவர்கள், புத்திஜீவிகள், தனவந்தர்கள், கல்விமான்கள் காட்டிய அக்கறை நமது உணர்வுகளை தாங்கி வருகிற நமக்கான உன்னத ஊடகமொன்றை கட்டமைப்பதில் ஏற்படவில்லை.

முஸ்லிம் சமூகம் ஊடகம் சார்ந்த முயற்சிகளில் அதீத அக்கறை செலுத்தாமல் செயற்பட்டதன் எதிர்வினைகளை கடந்த காலங்களில் முஸ்லிம்கள் மீதான வன்முறைகளின் போது அந்திய சமூகத்தாரின் ஊடகங்கள் பாராமுகமாய் இருந்த தருணங்களில் நாம் எல்லோரும் நன்கு உணர்ந்து கொண்டோம்.

இந்த இக்கட்டான சூழலில்  'பிறரின் பற்களை விட நமது முரசு திறம்' என்கிற வட்டார பழமொழிக்கு அமைய சிறியதோ பெரியதோ முதலில் நாம் நமக்கான ஊடகத்தை இனம் காண்பது அவசரமும் அவசியமுமாகும்.


2016 நவம்பர் 16 முதல் முயற்சி - முதல் நிகழ்ச்சி

[edit]

  வியூகம் முதலாவது அரசியல் நிகழ்ச்சியில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், சிரேஷ்ட சட்டத்தரணி கௌரவ. ஆரீப் சம்சுதீன் கலந்து கொண்ட நினைவுப்படம்

முகநூலில் முதன் முதல் வியூகம் TV பார்த்தவர்கள் பலருக்கு பரவசம். சிலருக்கு பரிதாபம். இன்னும் சிலர் 'வியூகமாம்' இவனுக்கு 'பைத்தியம்'; என்றார்கள். வியூகம் வுஏ ஆரம்பிக்கப்பட்ட முதல் வருடத்தில் முயற்சியின் உச்சக்கட்டம் என்றே சொல்லவேண்டும். சொற்ப வளத்தில் நாம் செய்த பல நிகழ்ச்சிகள் பலருக்கு நுட்பமாய் இருந்தது. சிலருக்கு அற்பமாய் தெரிந்தது. ஆனாலும் முயற்சிகள் தொடர்ந்தது. 'நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம் ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன என்பது டாக்டர் அப்துல் கலாமின் பொன்மொழி சொல்கிறது. இது நிதர்சனம் பிறந்த குழந்தை தவழத்தானே வேண்டும் வியூகமும் தவழ்ந்தது. ஆனாலும் தவழும் நேரத்திலும் வியூகம் தனித்து தெரிந்தது.


வியூகம் TV இன் ஆரம்பகால நிகழ்ச்சிகள்

[edit]
  • • நாம் பேச நினைப்பதெல்லாம்
  • • முற்றத்து மல்லிகை
  • • ஜூம்ஆ பிரசங்கம்
  • • விஷேட நேரலைகள்

என பல நிகழ்ச்சிகள் மக்கள் மனதில் நிலையான இடத்தை தக்கவைத்து கொண்டன. வியூகம் பலரது பேசும் பொருளானது உள்நாட்டு உறவுகளை விட சர்வதேச உறவுகள் எம்மில் அதிக அன்பும் நம்பிக்கையும் பூண்டனர். தேசம் கடந்தாலும் மண்ணின் உணர்வுமிக்க நேசத்தை கொண்டாடும் அவர்களுக்கு வியூகம் வுஏ உன்னத உறவு பாலமாய் செயற்பட்டது. அந்த வகையிலஇ; மத்திய கிழக்கு நாடுகள் ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ் பேசும் நெஞ்சங்களில் வியூகம் எனும் நாமம் ஓங்கி ஒலித்தது.


வியூகம் டிவியின் கத்தார் பயணம் ஒரு மைல்கல்

[edit]

மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் நம்மவர்களின் அன்பையும், ஆதரவையும், அபிமானத்தையும் கருத்திற்கொண்டு வியூகம் வுஏ குழுமத்தினர் 2017 ஏப்ரல் மாதம் 03 ம் திகதி கத்தார் பயணமாகினர்.

இப்பயணத்தில் வியூகம் ஊடக வலையமைப்பு தலைவரும், வியூகம் வுஏ பணிப்பாளருமான ஜனூஸ் சம்சுதீன், வியூகம் சிரேஷ்ட ஆலோசனை சபை உறுப்பினரும்இ கவிஞரும்இ கல்விமானுமான மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் மற்றும் வியூகம் டிவி முகாமையாளரும், சிரேஷ்ட தயாரிப்பாளருமான ஜெ.எம்.பாஸித் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். வியூகம் வுஏ ஆரம்பிக்கப்பட்ட குறுகிய நாட்களில் வெளிநாட்டு வாழ் அன்பர்களின் அபிமானத்தை வென்று, அவர்களது அழைப்பை ஏற்று தேசம் தாண்டி கத்தார் பயணமானது சிறப்பம்சமாகும்.

கத்தார் பயணமானது வியூகம் ஊடக வலையமைப்பின் செயற்பாடுகளை மேலும் விஸ்தரிப்பதில் உதவி புரிந்தது. கத்தார் நாட்டிலும் பல நிகழ்ச்சிகள், சந்திப்புக்கள், பயணங்கள் என வியூகம் வுஏ தனி முத்திரை பதித்தது.

தேசம் தாண்டி பயணித்தும் தம் உழைப்பால் திறமையால் முன்னேறிய பலரை வியூகம் வுஏ அடையாளப்படுத்தியதை அப்போதைய நிகழ்ச்சிகளில் பார்க்க முடியும்.

கத்தார் பயணத்தின்; முத்தாய்ப்பான தருணமாக இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர்இ அதிரடித் துடுப்பாட்ட வீரர் சனத் ஜெயசூரியவை சந்தித்து வியூகம் உத்தியோக பூர்வ வு. ளூசைவ கையளிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும். இதற்கு ஒத்துழைத்த தொழிலதிபர் அஹமட் ஆதம் அவர்களை வியூகம் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறது.

மேலும் கத்தாரில் இரவு-பகல் கிரிக்கெட் போட்டி ஒன்றினை தன்னால் இயன்ற தொழில் நுட்ப வளங்களை பாவித்து நேரடி ஒளிபரப்பு செய்து பலரின் பாராட்டைப் பெற்றது. இது வியூகம் வுஏ மேல் பலருக்கு அபிமானத்தை ஏற்படுத்தியது. வியூகம் வுஏ இன் கத்தார் பயணத்தின் போது அங்குள்ள நண்பர்களின் ஒத்துழைப்பில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்தின் கத்தார் கிளையை நிறுவப்பட்டு அங்கு வெற்றிகரமான ஒன்று கூடலும் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.