User:Pallapattimakkal

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search

Pallapatti makkal

பள்ளபட்டியின் பாரம்பரியம் மிக்க 'பெரிய மதரஸா' என்று அழைக்கப்படும் மக்தூம்மியா மதரஸாவின் வரலாறு.

கடந்த முன்னூறு ஆண்டுகளுக்கு முன்.

பள்ளப்பட்டி என்ற குக் கிராமத்தில் 17 ம் நூற்றாண்டில் மஹான் ஷேக் அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்கள் விடி வெள்ளியாக தோன்றினார்கள்.

அன்றைய நூற்றாண்டில் மக்கள் அடிமைகளாகவும், பெண்கொடுமை, வஞ்சகம் , சூழ்ச்சி , என பல இன்னல்களில் சூழ்ந்திருந்தனர். அன்னார் அவர்களின் நற் போதனையால் மக்கள் இஸ்லாத்தின் பக்கம் பார்வையை செலுத்தி இஸ்லாத்தில் இனைந்தார்கள்.

பல ஊர்களில் வசித்து வந்த மஹானின் சீடர்கள். அவர்களின் அன்பின் காரணமாக பள்ளப்பட்டியில் குடியேறி வாழத்துவங்கினர்.

அதன் பிறகு பள்ளபட்டி இஸ்லாமியர்கள் நிறைந்த ஊராகமாறியது. மஹான் அவர்களின் போதனையை ஏற்றும்., அவர்கள்மூலமாக மார்க்க கல்வியை அறிந்தும் நல் அமல்கள் செய்து வந்தார்கள். அன்றைய காலத்தில் ஆன்மீகத்தை போதிக்க மதரஸாக்கள் கிடையாது.

இந்த நிலையில் மஹான் அவர்கள் காலத்திற்கு பிறகு. அவர்களின் பேரரான புது சாஹிபு என்ற ஷாஹ் முஹம்மது அப்துல் அஜீஸ் சாஹிப் ஹஜரத் அவர்கள். ( 1834 - 1912 )


தன் இளம் வயதிலேயே ஹஜ் செய்ய நாடி ஹஜ் பயணம் புறப்பட்டார்கள். அவர்கள் மக்கா அடைந்து ஹஜ் கடமையை முடித்து அங்கு உள்ள மதரஸாக்களை பார்வையிட்டார்கள். அதில் மனம் ஈடுபட்டு ஹரம் ஷரீபில் நடைபெறும் பகுதி நேர வகுப்புகளிலும். பின்னர் புனித மக்க முக்கராமாவில் உள்ள "சவ்லாத்தியா" அரபி மதரஸாவில் சில ஆண்டுகளும்.

(பிற்காலத்தில் அஃலா ஹஜரத் அவர்கள் இங்குதான் பயின்றார்கள்)

ஆக மொத்தம் பத்து ஆண்டுகள் மக்காவில் ஓதி முடித்து தாயகம் திரும்பினார்கள். அவர்கள் தாயகம் திரும்பி தான் கற்ற மார்க்க கல்வியை தமிழகமெங்கும் பரப்ப புனித பயணம் மேற்கொண்டார்கள். அந்த பயணத்தில் அனேகமானவர்கள் இவர்களின் போதனையால் இஸ்லாத்தை தழுவினர்.

இதில் குறிப்பிடும் படியாக இருவர்கள். ஒருவர் கம்பம் உத்தமபாளையம் பகுதிகளில் பிரசித்தி பெற்ற மாபெரும் வீரராக. எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய - முஸ்தபா சாஹிப் என்பவரும். மாபெரும் வணிக வள்ளலாக திகழ்ந்த காயல் பட்டிணம் -மக்தூம் மரைக்காயர் அவர்களும். குறிப்பிடத்தக்கவர்கள்.

இவ்விரு பெரியார்களும் புது சாகிபு அவர்களின் மீது மாறாத அன்பு கொண்டு அவர்களுக்கு எதையும் செய்யும் நிலையில் இருந்தனர். இந்த இருவர்களும் புது சாஹிபு ஹஜரத் அவர்கள் அருகிலேயே வாழ்ந்து மறைய வேண்டும் என்ற நோக்கத்தில்.

பள்ளபட்டிக்கு குடி அமர்ந்து புது சாஹிபு அவர்களின் அருகிலேயே வாழ்ந்து அவர்களுக்கு சேவைசெய்தனர் இந்த நிலையில் அப்போது பள்ளப்பட்டியில் உலக கல்வியை போதிக்க தின்னை பள்ளிக்கூடங்கள் ஒன்றிரன்று இருந்தது.

ஆனால் மார்க்க கல்வியை போதிக்க மதரஸா என்று ஏதும் இல்லாத கால கட்டம். மஹான் ஷேக் அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்கள் காலத்தில். அவர்களின் மாமனார் மீரான் ஷா அவர்களின் நிதி உதவியில் கட்டப்பட்ட மேற்கு பள்ளி ( பெரிய பள்ளிவாசல் - பாவா ஃபக்ருதீன் டிரஸ்ட் ) மட்டுமே இருந்தது.,


அதன் அருகிலேயே உள்ள காலி இடத்தில் மதரஸா ஒன்று ஏற்படுத்தி மார்க்க கல்வி போதிக்கலாம் என்ற என்னத்தில். தன் சீடரான மக்தூம் மரைக்காயர் அவர்களிடம் புது சாஹிபு ஹஜரத் அவர்கள் ஆலோசித்த வேலையில். மக்தூம் மரைக்காயர் அவர்கள் தன் செல்வம் முழுவதையும் மதரஸாவிற்கு அற்பணி்க்க முன் வந்து. அப்பள்ளிக்கு அவர் சுமார் 9700 ரூபாய் மதிப்புள்ள ( இன்றைய நிலையில் பல கோடிகள்) மதிப்புமிக்க தென்னந்தோப்பினை வாங்கி.,

அதன் மூலம் வரக்கூடிய மாத வருவாய் ஐம்பதிலிருந்து., அப்பள்ளியை நடத்தலாம் என்று எண்னி இந்த இருவர்கள் முழு முயற்சியுடன். கூரை கொட்டகை அமைத்து. 1872 (ஹிஜ்ரி 1289) ம் ஆண்டுதிருக்குர்ஆன் மதரஸாவை நிறுவி உள்ளூர்காரர்களுக்கு ஓதி கொடுக்க ஏற்பாடு செய்தார்கள்.



அந்த சமயம் நிறுவனராகவும் முதல் ஆசிரியராகவும் உள்ள புதுசாஹிபு அவர்களுக்கு ஆண்டு ஊதியம் நூறுரூபாய் தரப்பட்டது. மதரஸாவிற்கு தொடர்ந்து மாணவர்கள் சேர்ந்து மார்க்க கல்வியை கற்று வரும் நேரத்தில். பொருளாதார தேவைக்காக அரசின் உதவியை நாடி மனு செய்தனர்.

அம்மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை மாகான அரசு., கோயம்பத்தூரை தலைமையிடமாக கொண்ட மாகானத்தின் ஐந்தாம் பிரிவில் ஆய்வாளராக பணிபுரிந்த.

W.R.கெர்ஷா(W.R.Kershaw) என்பவரை அப்பள்ளியை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு பணிந்தது. அரசு உத்திரவுபடி

பள்ளபட்டி " முஹம்மது மக்தூம் மரைக்காயர் " அவர்களின் பள்ளியினை ஆய்வு செய்த ஆய்வாளர்.

அரசுக்கு அறிக்கை அனுப்பினார். இவ்வறிக்கையில் மேல் நடவடிக்கை எடுத்த கல்வித்துறை. மார்க்ககல்வி உலக கல்வி இரண்டையும் ஒருசேர இங்கு கற்பிப்பதால்.

துறையின் கீழ் நிதி வழங்க முடியாது என்றும். உலக கல்வி மட்டுமே கற்பித்தால் நிதி வழங்க முன்வரும் என்று பதில் வந்தது. (1873 டிசம்பர் 14 ஆனை எண் 18-20, கல்வித்துறை .கோயமுத்தூர்.)

ஆனால் முஹம்மது மக்தூம் மரைக்காயர் அவர்கள். மார்க்க கல்வியை விட்டு உலக கல்வி மட்டும் கற்பிக்க முடியாது என்று பதில் கொடுத்ததால். அன்று அரசு நிதி பெறாமல் போனது.

இப்பள்ளியில் இரு வகை கல்வியும் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை (1967) கற்பித்து உள்ளனர்.